| ADDED : மார் 22, 2024 01:07 AM
சென்னை:'தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும் நிலையில், மவுனியாக இருக்கும் முதல்வரின் செயல் கண்டனத்துக்கு உரியது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவரது சமூக வலைதளப்பதிவு:மேகதாது அணை குறித்து ஏற்கனவே கர்நாடக அரசின் முதல்வரும், துணை முதல்வரும் ஆட்சேபமிக்க கருத்துகளை கூறியும், தி.மு.க., அரசின் முதல்வர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தார்.தற்போது மேகதாது அணையை கட்டியே தீருவோம் என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறியிருப்பதும்; கூட்டணி தர்மத்திற்காக, தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும் நிலையிலும், மவுனமாக இருக்கும் தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு என் கடும் கண்டனம்.ஏற்கனவே மேகதாது விவகாரம் குறித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க, தி.மு.க., அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து, உரிய சட்ட நடவடிக்கைளை எடுத்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.