உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சதுப்பு நிலம் கணக்கெடுப்பு ஜூனில் துவங்க உத்தரவு..

சதுப்பு நிலம் கணக்கெடுப்பு ஜூனில் துவங்க உத்தரவு..

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை, அடையாளம் காணும் பணியை, ஜூன் முதல் துவங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்தியா முழுதும் சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு தரப்பில், முன்னோடி திட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் முதல் அனைத்து மாவட்டங்களிலும் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை மேற்கொள்ளும்படி, தமிழக அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இதுகுறித்து, அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு அறிவுறுத்தியது.அடையாளம் காணும் பணிகளுக்காக, நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள, அரசுக்கு அனுமதி அளித்த முதல் பெஞ்ச்,விசாரணையை, ஜூலை முதல் வாரத்துக்கு தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஏப் 28, 2024 11:27

நான் பலவருடங்களுக்கு முன்பு பார்த்த அந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், இப்பொழுது பாதி கூட கண்ணுக்கு தெரியவில்லை அப்படி என்றால் என்ன அர்த்தம்? ஆட்சியில் உள்ளவர்கள் real estate முதலைகளுக்கு விற்றுவிட்டார்கள் என்றுதானே அர்த்தம் அதுதான் உண்மையும் கூட


Shanmugam
ஏப் 28, 2024 09:35

In normal non sunny days itself the lazy govt machinery doesnt do anything, but get monthly salary for doing nothing but gossip Do you think theyll go out in the searing hot sun in June and July and August and check what the contractors are doing?


S. Gopalakrishnan
ஏப் 28, 2024 08:56

சீக்கிரம் கண்டு பிடித்து சொல்லுங்கள். குடிசை போட்டு அம்பேத்கர் நகர், பெரியார் நகர் என்று பலகை வைத்து ஆக்கிரமிப்பு செய்ய ஆர்வமாக உள்ளேன் !


ßß
ஏப் 28, 2024 08:49

அப்படி ஒரு நிலம் தமிழகத்தில் அதுவும் சென்னையில் அதிகமாக இருந்த அந்த இடம் எங்கே என்று பூதக்கண்ணாடி வைத்துத்தான் தேட வேண்டும் அத்தனையும் ஆக்கிரமிப்பு


Kasimani Baskaran
ஏப் 28, 2024 07:41

உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்காமல் வேலை செய்த அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை விட்டுவிட்டு உயர் நீதிமன்றமும் புதிதாக வழக்குகளை உருவாக்கி நேரத்தை வீணடிப்பது மகா மட்டமான அணுகுமுறை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை