உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்?: வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்?: வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டில்லியில் இன்று(ஜூலை 27) நடக்கும், நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கால் மக்கள் மன்றத்தில் இன்று நிற்கிறேன். லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை பல்வேறு மாநில மக்கள் புறக்கணித்தனர். பா.ஜ.,வை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்பட்டது. இண்டியா கூட்டணிக்கு ஓட்டளித்த மக்களை பழிவாங்குவதற்காகவே பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பா.ஜ., அரசு புறக்கணித்து வருகிறது. தொடர்ந்து தவறுகளை செய்து வந்தால், மேலும் தோல்வியை சந்திப்பீர்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=grvhzxse&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இடையூறு

மதுரை எய்ம்ஸ் திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஒரு சில மாநில கட்சிகளின் ஆதரவு இல்லை என்றால் பா.ஜ.,வால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்பு திட்டத்தையும் பா.ஜ., அறிவிக்கவில்லை. தமிழகம் என்ற பெயரும் பட்ஜெட்டில் இல்லை. குறளும் இல்லை. பா.ஜ.,வுக்கு திருவள்ளுவரும் கசந்துபோய் விட்டார். நல்ல அரசு என்பது ஓட்டளிக்காத மக்களுக்காகவும் செயல்பட வேண்டும். தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் வழங்காமல் ஓட்டுகளை மட்டும் பா.ஜ., எதிர்பார்க்கிறது. திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு மத்திய பா.ஜ., அரசு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

ஏமாற்றமே

நாள்தோறும் திட்டங்கள், மக்கள் மனந்தோறும் மகிழ்ச்சி என்பது தான் நமது திராவிட மாடல் அரசின் நோக்கம். கடந்தாண்டு 2 முறை புயல் தாக்கிய நிலையில் வெள்ள நிதியை வழங்காமல் பா.ஜ., அரசு ஏமாற்றியிருக்கிறது. தங்கள் சறுக்கலுக்கான காரணத்தை உணர்ந்து பா.ஜ., அரசு திருந்தியிருக்கும் என நினைத்தேன். ஆனால் ஏமாற்றமே. மத்திய பா.ஜ., ஆட்சியில் நாற்காலியின் கால்களாக உள்ள மாநிலங்களுக்கு மடடும் கூடுதல் நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டி உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 96 )

Ramesh Sargam
ஆக 09, 2024 12:56

ஒருவேளை கருணா நிதி ஆயோக் என்று பெயர் இருந்திருந்தால் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க சென்றிருக்கலாம்...?


ramanujam
ஆக 02, 2024 19:58

துண்டு சீட் இல்லாம இவர் தகப்பனார் பெயரையே வாசிக்க தெரியாது என்று நாஞ்சில் சம்பத் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது


xyzabc
ஆக 02, 2024 12:49

கதை சொல்வதில் மன்னன் .


Narayanan
ஜூலை 29, 2024 12:35

ஏதோ திமுக தனித்து நின்று ஆட்சி அமைத்தது போல் பேசுகிறார் ஸ்டாலின். இவர்மட்டும் பதிமூன்று கட்சிகளின் ஆதரவு இல்லாமல் நின்றாரா ?? நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு என்ன பேசுவது ? அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அறியமுடியாத தன்மையின் காரணத்திற்காகவும் , உடல் நிலை உத்துழைக்காத காரணத்திற்க்காகவும்தான் கலந்து கொள்ளவில்லை .


rajan
ஜூலை 28, 2024 13:35

நீங்கள் தமிழ் நாட்டை ப்ரதிதிநிதியாக அங்கு சென்று நீங்கள் கூற விரும்பும் குறைகளையோ கூறி இருக்க வேண்டும். நீங்கள் சொல்லும் அனைத்தும் அங்கே பதிவு செய்யப்பட்டு நிவர்த்தி கிடைக்கும் அரை நீங்கள் போராட வேண்டும் .. இயலவில்லை எனில் நீதி மன்றத்தை நாட வேண்டும்


பேசும் தமிழன்
ஜூலை 27, 2024 23:50

அங்கே போனால் ....முன்பு ஒதுக்கிய நிதிக்கு கணக்கு காட்ட வேண்டும்....அந்த நிதியை என்ன செய்தீர்கள் என்று கேட்பார்கள் ....அதனால் தான் போகவில்லை என்று கூறுவது உண்மையா ??? கூட்டத்திற்கு போகாததால் ....கிடைக்க வேண்டிய நிதியும் கிடைக்காது .....உங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் கதி ..... அதோ கதிதான்.


S. Narayanan
ஜூலை 27, 2024 23:32

மக்கள் சிந்திக்க தொடங்கினாள் நாம் ஆட்சி அமைக்க முடியாது என்று திமுக நினைபதினால் தான் மக்களுக்கு இலவசங்களையும் டாஸ்மாக் சரக்கும் மற்றும் போதை பொருட்களையும் போலீஸ் உதவியுடன் கொடுத்து மக்களை மூளை சலவை செய்து செயல் படுகிறார்கள்.


தமிழ்நாட்டுபற்றாளன்
ஜூலை 27, 2024 22:59

போன மம்தா கதி என்ன ஆச்சு , போகாமல் இருந்ததே சாணக்கிய தனம் தான்


sankaranarayanan
ஜூலை 27, 2024 20:19

நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்றால் அந்த தலைப்பில் கருணா நிதி என்ற பெயரையே அதில் காணோம் அதனால்தானோ என்றோ தெரியவில்லையே


Palanisamy Sekar
ஜூலை 27, 2024 20:13

இவர் போயி.. எதுவும் நடக்கப்போவதில்லை. தமிழிலே கூட பேசத்தெரியவில்லை. மொழி தடுமாற்றம். சென்ற ஆண்டுகளிலும் இவர் போனதில்லை. என்னமோ வருடந்தோறும் போய்விட்டு சாதித்த மாதிரி இப்போ காணொளியை விட்டு விளக்கம் சொல்கின்றார். திரு வைகோ அவர்கள் இவரை பற்றி ஒரு காணொளியில் அழகாக விமர்சித்துள்ளார். ஸ்டாலின் வாட்ச்மேன் வேளைக்கு கூட லாயக்கில்லை என்று. எவ்வளவு ஆழ்ந்த அனுபவத்தில் சரியாக விமர்சித்துள்ளார். இப்போதுள்ள ஸ்டாலினின் நடவடிக்கையை பார்க்கும்போது மனுஷன் எவ்வளவு தீர்க்க தரிசனமாக விமர்சித்துள்ளார் என்று தெரிகின்றது. தமிழகத்தின் சாபம் திமுகவின் ஆட்சி தான்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை