உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய திமுக: இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய திமுக: இபிஎஸ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தை போதைப் பொருள் கேந்திரமாக திமுக அரசு மாற்றியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய திமுக அரசுக்கு கண்டனம். போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் குஜராத்தோடும், அஸ்ஸாமோடும், மற்ற வட மாநிலங்களோடும் தமிழகத்தை ஒப்பிட்டுத் தனக்குத்தானே ஒரு பொய்மைத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.போதைப் பொருள் தொடர்பாக 29 நாட்களில் 402 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த 402 பேர் சுதந்திரமாக போதைப் பொருள் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தது யார்? இந்த வியாபாரத்தின் ஆணிவேரை கைது செய்ய இதுவரை இந்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

போதைப் பொருள் கேந்திரம்

போதைப் பொருள் கடத்தல் குறித்து நாங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்காத இந்த திமுக அரசு இனியாவது தூக்கத்தில் இருந்து விழித்து தமிழகத்தில் நிலைமை என்ன என்று கூர்ந்து கவனித்து உடனடிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். தமிழகத்தை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய இந்த மக்கள் விரோத திமுக.,விற்கு வரும் பார்லிமென்ட் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

DARMHAR/ D.M.Reddy
மார் 19, 2024 05:51

தனது முதுக்குப்புண் அவருக்கு எப்படி தெரியும்?


Ramesh Sargam
மார் 19, 2024 05:34

உங்கள் ஆட்சியிலும் போதைப்பொருட்கள் நடமாட்டம், உபயோகம் இருந்தது. ஆனால் இந்த ஆட்சியில் திமுகவின் பூரண 'ஆசீர்வாதத்துடன்' சிறப்பாக நடக்கிறது. 'சிறப்பாக சேவை' புரிபவர்களுக்கு திமுக அரசின் காவல்துறை அதிகாரியே 'சன்மானம்' எல்லாம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்கிறார். இல்லை என்று மறுக்கச்சொல்லுங்கள் முதல்வரை.


D.Ambujavalli
மார் 19, 2024 04:05

உங்கள் அம்மா ஆட்சியில் பிடிபட்டவனுக்கு ஆதரவு கொடுத்தவர் இன்றுதான் போதைப்பொருள் நுழைந்துவிட்டதை போல அறிக்கை விடுகிறார் இரண்டு…. மூன்று கட்சிகளுமே இதில் கூட்டுக்களவாணிகள்தான் வடக்கே ஒன்று, தெற்கே இரண்டு


முருகன்
மார் 18, 2024 22:10

கூட்டணி அமையாத மயக்கத்தில் இவரின் பேச்சு இப்படி தான் இருக்கும் பத்து வருட இவர்களின் ஆட்சியில் போதை பொருள் என்ற ஒன்று இல்லாத மாதிரி பேசுவது சாரியா


Rathinakumar KN
மார் 18, 2024 20:22

நாலு வருஷம் முதலமைச்சர் பதவியில் இருந்து உள்துறை கையில் வைத்திருந்த பழனிசாமி அவர்களே இது போன்ற போதை மருந்து கடத்தல்காரனை அதுவும் ஜெ உயிரோடு இருந்த காலத்தில் போதை வழக்கில் கைது செய்ப்பட்ட ஒருவரை இப்போது தான் இவரை பற்றி அறிந்தவர் போல் நடிப்பது உலக மகா நடிப்பு தவழ்ந்த பாடியே


S.kausalya
மார் 18, 2024 17:29

இந்த ஆளை நம்பாதீங்க. எப்படி கருணாவும், ஜெயாவும் சேர்ந்து விஜயகாந்தை அரசியலில் செல்லா காசு aakkinaargalo அதே போன்ற,இவர்மீது,ஸ்டாலினும் சேர்ந்து அண்ணாமலையை செல்லா காசு ஆக்க Bjp யை நிரந்தரமாக தமிழ்நாட்டில் இருந்து ஓட விட எல்லா eththani வேலையும் செய்கிறார்கள். எப்போது நெற்றியில் இருந்த thiruneerai azhiththaaro அப்போது முதல் edappaadiyin சுயம் வெளுத்து விட்டது.


Selvakumar Krishna
மார் 18, 2024 17:12

போதைப்பொருள் இறக்குமதி செய்து வரும் முதலாளிகள் துறைமுகத்தை குறித்து கண்டனம் தெரிவிக்க திமுக வை குறை கூற வந்து விட்டார்


துறைவன்
மார் 18, 2024 16:49

டாஸ்மாக்.தொறந்தோமே டாஸ்மாக்... குட்கா வித்தோமே குட்கா...


Narayanan
மார் 18, 2024 16:43

இதற்க்கு முழுவதும் தனது பதவிக்காலத்திலிருந்து இன்று வரை துணை நிற்கும் ..... பேச தகுதி இல்லை .


வெகுளி
மார் 18, 2024 14:46

போதை கலாச்சாரத்தை ஒழிப்பதில் அரசியல் கூடாது.... போதை இளைஞர்களின் வருங்காலத்தை அழிக்கும் மிக கொடிய பிரச்சனை...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை