உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடியின் விடுதலைக்காக சிவனிடம் தி.மு.க.,வினர் பிராது 

பொன்முடியின் விடுதலைக்காக சிவனிடம் தி.மு.க.,வினர் பிராது 

திருவெண்ணெய்நல்லுார்:திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் உள்ள சிவன் - சுந்தரமூர்த்தி நாயனார் வழக்காடு மன்றத்தில், தி.மு.க.,வினர், முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலைக்காக வேண்டி பிராது மனு அளித்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள, 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனார் வழக்காடு மன்றம் உள்ளது.சிவபெருமானும் - சுந்தரமூர்த்தி நாயனாரும் வழக்காடிய மன்றத்தில் தீராத வழக்கும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம். இந்நிலையில், நேற்று காலை திருவெண்ணெய்நல்லுார் பகுதி தி.மு.க.,வினர், முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலையாக வேண்டி, பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன் தலைமையில் சிவபெருமானிடம் பிராது மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ