உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  காங்., தோல்வியடைந்தது மகிழ்ச்சியே: சீமான்

 காங்., தோல்வியடைந்தது மகிழ்ச்சியே: சீமான்

திருச்சி: தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி: தமிழகத்தில், பீஹார் தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஆக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தேர்தல் வியூகம் வகுப்பவர்கள் கருத்து கூறுவது வேறு; களம் என்பது வேறு. காங்கிரஸ் தோல்வியடைவதில், எனக்கு மகிழ்ச்சி தான். தமிழகத்தில் காமராஜர் மறைவுக்குப் பின், காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது. தற்போது இருப்பது ஒரு கம்பெனி. திராவிட கட்சிகளின் தோள்களில் ஏறிக்கொண்டு தான், காங்கிரசும் பா.ஜ.,வும் வசதியாக பயணம் செய்கின்றன. பீஹாரில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றதற்கு, ஆயிரம் காரணம் சொல்லப்பட்டாலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முக்கிய காரணம். திட்டமிட்டு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதே வேலையை தமிழகத்திலும் செய்ய வாய்ப்புள்ளது. எஜமானர்களான பா.ஜ.,வினர், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கொண்டு வந்ததால், அதை, அ.தி.மு.க.,வினர் ஆதரிக்கின்றனர். எதிர்ப்பதாக கூறும் தி.மு.க., சட்டசபையை கூட்டி, அதை அறிவிக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை