| ADDED : டிச 06, 2025 01:53 AM
சென்னை: 'போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்' என, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். பி.என்.எஸ்.எஸ்., எனும் 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஷிதா' சட்டத்தின் கீழ், மத்திய அரசு படைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய, உயர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதன் அடிப்படையில், தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கு, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு முன், அர சிடம் முன் அனுமதி பெற வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, உள்துறை செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ளார்.