உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / மண் தரையில் நேரடியாக கான்கிரீட் தளம் அமைக்கலாமா?

மண் தரையில் நேரடியாக கான்கிரீட் தளம் அமைக்கலாமா?

கட்டுமான பணியின் போது குறிப்பிட்ட சில இடங்களில், சிமென்ட் தரை போட வேண்டிய தேவை இருக்கும். குறிப்பாக, கட்டடத்தின் தரைப் பகுதி, கட்டடத்தின் வெளியில் சுற்றுப்புற பகுதி, நடைபாதை என, பல இடங்களில் சிமென்ட் தரை அமைக்க வேண்டிய தேவை இருக்கும்.மண் தரையில், சிமென்ட் தளம் அமைக்க வேண்டும் என்றால் அந்த இடத்தின் பயன்பாடு என்ன என்று பாருங்கள், கார் போன்ற வாகனங்கள் நிறுத்துமிடம் என்றால், அந்த வாகனத்தின் சுமையை தாங்கும் வகையில் தரை அமைப்பது அவசியம். இதில் நிலத்தை முதலில் சமன் செய்து அதில் 'எம் சாண்ட்' அல்லது மணலை பரப்ப வேண்டும்.அதன்பின் முக்கால் அங்குல ஜல்லி என்று கொடுக்கப்படும் கருங்கல் ஜல்லியை சிமென்ட், மணலுடன் கலந்து பரப்ப வேண்டும். இதன் மேல் குறிப்பிட்ட அளவுக்கு அழுத்தம் கொடுத்து தரைப்பகுதியை சமன்செய்து அடுத்த நிலைக்கு தயார்படுத்த வேண்டும்.இதற்கு பின், அங்கு கான்கிரீட் தரை அமைப்பதற்கான பணிகளை துவக்க வேண்டும். இந்நிலையில் நிலத்தின் கான்கிரீட் தளம் அமைக்கும் போது அங்கு வந்து செல்லும் வாகனங்களின் தன்மை என்ன, கடந்து செல்லும் வழியா, நிறுத்தப்படும் இடமா என்று பாருங்கள்.இதில் கான்கிரீட் போடும் முன் அங்கு கம்பி கட்டும் வேலையை மேற்கொள்ள வேண்டும். கான்கிரீட் பயன்படுத்தி தரை அமைக்க வேண்டும் என்றால் சுமை தாங்கும் திறன் என்ன என்று முடிவு செய்து அதற்கு ஏற்ற வகையில் கான்கிரீட் தளத்தின் தடிமன் என்ன என்பதை முடிவு செய்யுங்கள்.பொதுவாக, 3 அல்லது 4 அங்குலம் தடிமன் அளவுக்கு கான்கிரீட் தளம் அமைக்கப்படுவது வழக்கம். இதில், ஆர்.சி.சி., எனப்படும் கம்பிகளை உள்ளீடாக வைத்து, அதன் மேல் கான்கிரீட் கலவையை கொட்டி தரை அமைக்கும் பணிகளை மேற்கொள்வது நீண்ட காலத்துக்கு பயன் அளிக்கும்.கம்பி கட்டும் வேலை முடிந்த நிலையில் அதன்மேல் கொட்ட வேண்டிய கான்கிரீட் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். குறிப்பாக, எம்: 20 வகை கான்கிரீட் கலவையை தான் இதற்கு பெரும்பாலும் பயன்படுத்துவார்கள் என்பதை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும்.இதற்கு, ஜல்லி, சிமென்ட், மணல் வாங்கி கலந்து கான்கிரீட் கலவை தயாரித்து பயன்படுத்துவது என்பது அதிக செலவை ஏற்படுத்தும் நிகழ்வாக உள்ளது. எனவே, ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவையை வாங்கி பயன்படுத்துவது விரைவாக சிமென்ட் தரை அமைப்பதற்கு உதவும்.அதிக சுமை ஏறாது என்ற நிலையில் உள்ள இடம் என்றால் அங்கு, கம்பிகளை உள்ளீடாக வைக்காமல், 1 அங்குலம் தடிமன் அளவுக்கு மெல்லிய தரை அமைப்பதற்கும் ரெடிமிக்ஸ் கலவையை பயன்படுத்தலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்