உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / மகளிருக்கு 40% வேலைவாய்ப்பு: தொழிற்சாலைகளுக்கு அட்வைஸ்

மகளிருக்கு 40% வேலைவாய்ப்பு: தொழிற்சாலைகளுக்கு அட்வைஸ்

சென்னை: தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோரில், 43 சதவீதம் பேர் பெண்கள். இந்தியாவில் தொழிற்சாலைகளில் அதிக பெண்கள் பணிபுரியும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழக அரசு, தொழில் முதலீடுகளை ஈர்க்க, சென்னையில் இம்மாதம், 7, 8ல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது. அதில், 632 தொழில் நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதனால், மொத்தம் 26.90 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.இந்நிலையில், புதிதாக அமைக்கப்படும் ஆலைகளில் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்குமாறு, தொழில் நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில், மருத்துவம், இன்ஜினியரிங், ஆராய்ச்சி என, அனைத்து உயர் படிப்புகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். பெண் பணியாளர்கள் பயன்பெற, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தொழில் பூங்காக்களில், தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.எனவே, புதிதாக ஆலை அமைக்கும் தொழில் நிறுவனங்களிடம், தங்களின் மொத்த வேலைவாய்ப்பில் பெண்களுக்கு, 40 சதவீதம் வேலை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை