மேலும் செய்திகள்
இந்திரா சதுக்கம் அருகில் வாய்கால் சீரமைப்பு பணி
1 hour(s) ago
இறந்தவரின் உடல் தானம்
1 hour(s) ago
சாலை விபத்தில் மூவர் காயம்
1 hour(s) ago
பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது
1 hour(s) ago
ஆலப்புழா, கேரளாவின் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன், பா.ஜ.,வின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில செயலராக இருந்தார். வழக்கறிஞரான இவர், 2021ல், அவரது குடும்பத்தார் கண் எதிரில், மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப் பட்டனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான விசாரணை, மாவேலிக்கரா கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.அப்போது, 1,000க்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன.அரசு தரப்பில் 156 பேர் சாட்சி அளித்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியாவைச் சேர்ந்த 15 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.இவர்களுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்பட உள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago