உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முத்துக்குடா பகுதியில் அலையாத்தி காடு: சுற்றுலா தலம் அமைக்கும் பணி தீவிரம்

முத்துக்குடா பகுதியில் அலையாத்தி காடு: சுற்றுலா தலம் அமைக்கும் பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதி 42 கி.மீ., உள்ளது. கடற்கரையோரத்தில் சில இடங்களில் அலையாத்தி காடுகள் உள்ளன. அந்த பகுதிகளில் ஒன்றான, முத்துக்குடா பகுதியில் சுற்றுலா தலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.இப்பகுதியில் தெற்கு வெள்ளாறு கடலோடு கலக்கிறது. அலையாத்தி காடு உருவாக்குவதற்காக கடற்கரை பகுதியில் 1,600 மீட்டர் தொலைவிலும், 91 கிளைகள் பிரிந்து செல்லும் வகையிலும் வடிவமைத்து வாய்க்கால்கள் வெட்டப்பட்டுள்ளன.மீன் முள்வடிவ தோற்றத்தில் இந்த அலையாத்தி காடு உருவாக்கப்படுகிறது. இதில், 44 ஆயிரம் அலையாத்தி செடி விதைகள் விதைக்கப்பட்டன. கடந்த ஆண்டில் விதைக்கப்பட்டவை தற்போது நன்கு வளரத் தொடங்கியுள்ளன. அலையாத்தி செடிகள் வளர்ந்து வரும் நிலையில் மரமாகி விரைவில் காட்டின் தோற்றம் அடைந்து விடும்.அலையாத்தி காடு அடர்த்தியாகக் காணப்படுவதை போல, இந்த பகுதியிலும் அலையாத்தி காடு உருவாகும். இதன் வாயிலாக மீன் உட்பட கடல்வாழ் உயிரினத்தை பெருக்க பயனாக அமையும். கடல்நீர் பெருக்கெடுத்து கரைக்கு வர வாய்ப்புகள் குறையும். பறவையினங்கள் அதிகம் வந்து தங்குவதற்கு வசதியாக அமையும். வெளிநாட்டு பறவைகளும் வர வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை