உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

புதுச்சேரி : காலாப்பட்டு செவாலியர் செல்லான் அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகே கஞ்சா விற்பதாக கலாப்பட்டு போலீசாருக்கு தகவல் வந்தது.அதனை அடுத்து, போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு சந்தேகப்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்ச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாறன்,34; அவரது நண்பணின் மனைவி, செங்கல்பட்டு அடுத்து கல்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெரினாபேகம், 31; ஆகியோர் என தெரியவந்தது.இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும், கோர்ட்டில் ஆஜர் படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை