உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்விரோத தகராறு இருவர் மீது தாக்குதல்

முன்விரோத தகராறு இருவர் மீது தாக்குதல்

புதுச்சேரி: முன்விரோத தகராறில் சகோதர்களை தாக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.முத்தியால்பேட்டை வசந்தம் நகரை சேர்ந்தவர் சசிகுமார், 31; இவர் கோழி, நாய் வளர்த்து வருகிறார். இதனால், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த லலிதா என்பவருக்கும் சசிக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று வீட்டு வழியாக சென்ற சசிகுமாரை, பக்கது வீட்டை சேர்ந்த லலிதாவின், மகன்கள், ராஜி, ரங்கநாதன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து தாக்கினர். இதை தட்டிக் கேட்ட, சசிகுமாரின் அண்ணன், வேல்முருகனையும் தாக்கியுள்ளனர். சசிகுமார் புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ராஜி, ரங்கநாதன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை