உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் குளத்தில் அனுமதியின்றி மீன் பிடிப்பு ; சிவனடியார்களால் லாாி சிறைபிடிப்பு

கோவில் குளத்தில் அனுமதியின்றி மீன் பிடிப்பு ; சிவனடியார்களால் லாாி சிறைபிடிப்பு

புதுச்சேரி : வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் இருந்து நேற்றிரவு அனுமதியின்றி மீன்களை பிடித்து ஏற்றி செல்ல முயன்ற லாரியை சிவனடியார்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி காந்தி வீதியில் வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் கோவில் நிர்வாகம் மூலம் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நேற்றிரவு கோயில் நிர்வாகம் மூலம் முறையாக எந்தவித டெண்டரும் விடப்படாமல், திடீரென அனுமதியின்றி கோவில் குளத்தில் இருந்த மீன்களை சிலர் பிடித்து, அதனை லாரியில் ஏற்றி செல்ல முயன்றனர்.இது குறித்து அறிந்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டு, குளத்திலிருந்து அனுமதி இன்றி மீன்களை பிடித்து ஏற்றி செல்ல முயன்ற லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பெரியகடை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சிவனடியார்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து, முறையான அனுமதியின்றி மீன்களை பிடித்து செல்ல பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து, ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர்.சிவனடியார்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ