உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை

மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை

அரியாங்குப்பம் : முதலியார்பேட்டை அடுத்த வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சஜி நாராயணன், 45; சோப் ஆயில் கடை நடத்தி வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், வீட்டில் இருந்தே தொழில் செய்து வந்தார். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. அதையடுத்து, கணவரிடம் கோபித்து அவரது மனைவி வெளியில் சென்றார். அதில் மனமுடைந்த சஜி நாராயணன் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ