உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காட்டில் மர்ம நபர்கள் தீ வைப்பு

காட்டில் மர்ம நபர்கள் தீ வைப்பு

வில்லியனுார்: சேதராப்பட்டு அருகே சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கையகப்படுத்திய பகுதியில் உள்ள காட்டில் மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.சேதராப்பட்டு அடுத்த கரசூர் கிராமத்தில் 800 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அரசு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிலத்தை கையப்படுத்தினர். பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டு பிப்டிக் நிர்வாக்திடம் இடத்தை கொடுத்தனர்.இந்த நிலப் பகுதியில் மரங்கள் வளர்ந்து தற்போது காடுகளாய் மாறி உள்ளது. கரசூரில் இருந்து வானுார் சாலையில் காடுபோன்ற இடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.காடு தீப்பற்றி எரிந்தது. இது குறித்து நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் சேதராப்பட்டு போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து சேதராப்பட்டு தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் வெங்கடேசன், வைத்தியநாதன் சக்திவேல் உள்ளிட்ட வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.இச் சம்பவம் குறித்து சேதராப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி