உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராயக்கடை ஊழியரை தாக்கிய நிதி நிறுவன ஊழியர்களுக்கு வலை

சாராயக்கடை ஊழியரை தாக்கிய நிதி நிறுவன ஊழியர்களுக்கு வலை

புதுச்சேரிJ கார் தவணையை செலுத்த தவறிய சாராயக்கடை ஊழியரை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்களை போலீசார் தேடி வருகின்றனர்.முத்தியால்பேட்டை, திருவள்ளுவர் நகர் செட்டிக்குளம் வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 30; சாராயக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த ஆண்டு கடனில் கார் வாங்கினார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், மாத தவணையை செலுத்தாமல் இருந்தார்.நிதி நிறுவன ஊழியர்கள் நேற்று வெங்கடேஷ் வீட்டிற்கு சென்று தவணை தொகையை கேட்டனர். இதனால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, நிதி நிறுவன ஊழி யர்கள் வெங்கடேைஷ தாக்கி விட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, நிதி நிறுவன ஊழியர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை