உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

அரியாங்குப்பம் : ஆண்டியார்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் இலஞ்சியம் வரவேற்றார். ஆசிரியை அமலி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் பங்கேற்று, பள்ளியில் அமைக்கப்பட்ட மூலிகை தோட்டத்தை திறந்து வைத்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.முதன்னை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு சிறப்புரை நிகழ்த்தினார். ஆசிரியர்கள் அருணாசலம், டேவிட் சாலமன் ராயன், முருகன், மன்னாதன், தமிழரசி, சாலினி, ரத்தினம்மாள், கோமளவள்ளி, ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை