| ADDED : ஆக 12, 2024 11:49 PM
திருக்கழுக்குன்றம், : திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் உள்ள மலைக்குன்று பகுதிகளில் அதிகளவில் குரங்குகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன், குறைவாக இருந்த நிலையில், நாளடைவில் இனப்பெருக்கத்தால், அதிகமாக பெருகியுள்ளன.மலைக்குன்று பகுதியில் இரை கிடைக்காத நிலையில், தற்போது நகர்ப்பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன. மேலும், சாலையில் நடந்து செல்வோரிடம், உணவுப்பொருள் உள்ளிட்டவற்றை பறிக்கின்றன. வீடுகள், கடைகள் என புகுந்து, பழம், தேங்காய், உணவு உள்ளிட்டவற்றை எடுத்து செல்கின்றன.இந்த குரங்குகளை விரட்ட சென்றால், கடிப்பதற்காக பாய்கின்றன. இதன் காரணமாக, திருக்கழுக்குன்றம் வாசிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, திருக்குழுக்குன்றம் பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை, வனத்துறையினர் வாயிலாக பிடித்து, வனப்பகுதிகளில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேரூராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.