உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கற்பக விநாயகா கல்லுாரியில் சாதனை பெண்கள் கவுரவிப்பு

கற்பக விநாயகா கல்லுாரியில் சாதனை பெண்கள் கவுரவிப்பு

மதுராந்தகம் : மதுராந்தகம் அடுத்த படாளத்தில், கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், பெண்களை கவுரவிக்கும் வகையில், மாதரே டி24 விருது வழங்கும் விழா, நேற்று முன்தினம் கல்லுாரி அரங்கத்தில் நடந்தது.இந்நிகழ்வில், ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய சாதனை பெண்கள் அடையாளம் காணப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.தமிழ் பேச்சாளர் பாரதி பாஸ்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லுாரியின் இயக்குனர் மீனாட்சி அனைவரையும் வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் காசிநாதபாண்டியன் மற்றும் கல்லுாரி டீன் சுப்பாராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில், மருத்துவம், பொறியியல், விண்வெளி அறிவியல், தொழில் முனைவோர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பெண் வல்லுனர்களுக்கு சாதனைப் பெண்கள் விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை