உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டியவர் கைது

மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டியவர் கைது

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி, விஸ்வநாதபுரம் முதல் தெருவில், சிவகாசியைச் சேர்ந்த பாபு, 46, என்பவர், பாலாஜி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம், அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, 32, என்பவர் சென்று, பொங்கல் செலவுக்கு, 1,000 ரூபாய் மாமுல் தருமாறு கேட்டு மிரட்டியுள்ளார்.பணம் தர மறுத்ததால் கடையில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியும், பாபுவை அடித்து காயப்படுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.இது தொடர்பாக, கூடுவாஞ்சேரி போலீசில் பாபு புகார் செய்தார். அதன்படி, கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, பிரபுவை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை