உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தகாத உறவை கண்டித்த மனைவி மீது சரமாரி தாக்கு

தகாத உறவை கண்டித்த மனைவி மீது சரமாரி தாக்கு

அமைந்தகரை, அமைந்தகரை, கஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 40; தனியார் நிறுவன ஊழியர். கார்த்திகேயனுக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இரு தினங்களுக்கு முன், கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கார்த்திகேயனை, மனைவி கண்டித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், தன் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார்போலீசார் விசாரித்த போது மனைவியை தாக்கியது உறுதியானதால், கார்த்திகேயனை கைது செய்து, பெண் வன்கொடுமை, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை