உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவொற்றியூரில் 259 ஸ்மார்ட் கார்டு வழங்கல்

திருவொற்றியூரில் 259 ஸ்மார்ட் கார்டு வழங்கல்

திருவொற்றியூர், திருவொற்றியூர், கத்திவாக்கம், மணலி, மணலிபுதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், புதிய ஸ்மார்ட் கார்டுகள் கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து காத்திருந்தனர். லோக்சபா தேர்தல் நடத்தை விதிகளால், அப்பணிகள் தடைப்பட்டிருந்தன.இந்நிலையில், நேற்று காலை, புதிய ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பித்திருந்த, 259 பயனாளிகளுக்கு புதிய அட்டைகள் வழங்கப்பட்டன.திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம், நுகர்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகத்தில், உதவி கமிஷனர் தெரேசா தலைமையில், புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டது.இதில், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு பங்கேற்று, பயனாளிகளுக்கு, புதிய ஸ்மார்ட் அட்டைகள் வழங்கினார்.விரைவில், விண்ணபித்த அனைவருக்கும், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என, உதவி கமிஷனர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை