உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குளத்தில் விடப்பட்ட கழிவுநீர் வெளியேற்றம்

குளத்தில் விடப்பட்ட கழிவுநீர் வெளியேற்றம்

கண்ணகி நகர், சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு, கண்ணகி நகரில் 4.50 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. சாலை மட்டத்தில் குப்பை, சகதியாக இருந்த இந்த குளத்தை, 3 ஏக்கர் ஒரு பகுதியாகவும், 1.50 ஏக்கர் மற்றொரு பகுதியாகவும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி, தன்னார்வ அமைப்பு வாயிலாக, 75 லட்சம் ரூபாயில் கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. குளத்தை ஆழப்படுத்தி, நடைபாதை, சுற்றி வேலி, பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டது. மேலும், 3 ஏக்கர் குளம் நிரம்பி, 1.50 ஏக்கர் குளத்தை நிரம்பும் வகையில் கட்டமைக்கப்பட்டது.இந்நிலையில், குளத்திற்கு தண்ணீர் செல்லும் மழைநீர் வடிகாலில், சுற்றுப்புறப் பகுதிகளில் இருப்போர் கழிவுநீர் விட்டனர். இந்த கழிவுநீர் 1.50 ஏக்கர் குளத்தில், ஏற்கனவே தேங்கியிருந்த தண்ணீர் கலந்து துர்நாற்றம் வீசியது.இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, குளத்தில் விடப்பட்ட கழிவுநீரை வெளியேற்றும் பணி, மாநகராட்சி சார்பில் நடக்கிறது. மேலும், குளத்திற்கு வரும் வடிகாலை பகிங்ஹாம் கால்வாயில் திருப்பி விடும் வகையில், நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை