உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலைவனமான மேய்ச்சல் நிலங்கள்: கால்நடைகள் வளர்ப்போர் திணறல்

பாலைவனமான மேய்ச்சல் நிலங்கள்: கால்நடைகள் வளர்ப்போர் திணறல்

பொள்ளாச்சி;வறட்சியால் தீவனம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால், கால்நடைகளை பராமரிக்க முடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், அதிகரிக்கும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அதற்கான தீவன உற்பத்தி அதிகரிக்கவில்லை. குறைந்த சதவீத பரப்பில் மட்டுமே கால்நடைகளுக்கான தீவனப் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.அதனால், விவசாய சாகுபடி பயிர்களில் கிடைக்கும் வைக்கோல், விளைநிலங்கள் மற்றும் தரிசு நிலங்களில் இருக்கும் புற்களை நம்பியே கால்நடை வளர்ப்பு உள்ளது.கடந்த பருவமழையின்போது, பொள்ளாச்சி பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் தற்போது வறட்சி நிலவுகிறது. நீராதாரமிக்க குளம், குட்டைகள், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.பல இடங்களில், குளம், குட்டைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேய்ச்சல் நிலங்கள் பாலைவனம் போல இருப்பதால், கால்நடைகள் தீவனம் கிடைக்காமல் தவிக்கின்றன.மேலும், தண்ணீர் மற்றும் தீவனப் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு தொற்றுநோய், வயிற்றுக் கோளாறு ஏற்படுகிறது. இதனால், விவசாயிகள் பலர் கால்நடைகளை சரிவர பராமரிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'மாட்டுத்தீவனம் மற்றும் தண்ணீருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தண்ணீரை விலைக்கு வாங்கியே, கால்நடைகளுக்கு அளிக்க வேண்டியுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் வைக்கோல் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை