உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆவணி அவிட்டத்தில் பூணுால் அணிந்தால் லட்சுமி கடாட்சம்

ஆவணி அவிட்டத்தில் பூணுால் அணிந்தால் லட்சுமி கடாட்சம்

போத்தனூர்;சுந்தராபுரம் அடுத்து இடையர்பாளையத்தில், முத்து விநாயகர் கோவில் உள்ளது. நேற்று ஆவணி அவிட்டம் முன்னிட்டு, விஸ்வகர்மா சமூக நல சங்கம், விஸ்வ பாரத் மக்கள் கட்சி சார்பில், பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விஸ்வகர்மா ஜகத்குரு சிவசண்முகசுந்தர பாபு சுவாமிகள், பங்கேற்றவர்களுக்கு ஆசி வழங்கி பேசுகையில், ஆவணி அவிட்டத்தில் பூணூல் அணிவதால், தொழில் மேன்மை, ஐஸ்வர்ய வளம், குடும்பநலம், லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படும். இந்நிகழ்ச்சி, மாநிலம் முழுவதும் விஸ்வ பாரத் மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படுகிறது, என்றார். தெற்கு மாவட்ட தலைவர் லட்சுமணன், விஸ்வ பாரத் மக்கள் கட்சி மாநில தலைவர் வேலுமணி, துணை பொது செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை