உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடிக்கடி மின்வெட்டு ;அவதிப்படும் மக்கள்

அடிக்கடி மின்வெட்டு ;அவதிப்படும் மக்கள்

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு கம்பன் வீதி மற்றும் அண்ணா நகர் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு அண்ணா நகர் ஒரு பகுதி மற்றும் கம்பன் வீதியில், குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இப்பகுதியில், பள்ளி செல்லும் குழந்தைகள், பெரியவர்கள் அதிகம் உள்ளனர்.இப்பகுதியில், தினமும் முன்னறிவிப்பின்றி பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. தினமும், 5 முதல் 10 முறை மின்வெட்டு செய்யப்படுகிறது. தற்போது, கோடை காலம் என்பதால் மின்சாரம் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். தற்போது தேர்வு நேரம் என்பதால், இரவு நேரத்தில் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகிறது.இதுகுறித்து, மின்வாரிய துறை அதிகாரிகளிடம் போன் வாயிலாகவும், நேரில் சென்றும் மக்கள் புகார் தெரிவித்தனர். மின்வெட்டு பிரச்னையை சரி செய்து தருகிறோம் என, அதிகாரிகளும் கூறுகின்றனர்.ஆனால், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாமல், தற்காலிகமாக சரி செய்துள்ளனர். மின்வெட்டு தொடர்கதையாகி வருவதால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மக்கள் நலன் கருதி மின்வெட்டு பிரச்னைக்கு, மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை