உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.4.63 லட்சம் மோசடி போலீசார் விசாரணை

ரூ.4.63 லட்சம் மோசடி போலீசார் விசாரணை

கோவை;கோவை வடவள்ளியை சேர்ந்த பிரீத்தி, 34 தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த நவ., மாதம் இவரது மொபைல் போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு குறித்து, குறுந்தகவல் வந்தது. அதில், கூகுள் இணையதளத்தில் பல்வேறு நிறுவனங்களை ரிவ்யூ செய்தால், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.இதை நம்பி, முதற்கட்டமாக சிறிய தொகை முதலீடு செய்தார்; அவருக்கு கூடுதல் லாபம் கிடைத்தது. இதை தொடர்ந்து, மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளாக ரூ.4.63 லட்சம் முதலீடு செய்தார். இதற்கு பின், லாப தொகை கிடைக்கவில்லை. முதலீடு பணமும் திரும்ப பெற முடியவில்லை.இவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை