உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  துணை முதல்வர் பிறந்தநாள்: தி.மு.க.வினர் கொண்டாட்டம்

 துணை முதல்வர் பிறந்தநாள்: தி.மு.க.வினர் கொண்டாட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரத்தில் தி.மு.க. சார்பில், துணை முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி வடக்கு நகர தி.மு.க. சார்பில், துணை முதல்வர் உதய நிதியின், 48வது பிறந்தநாள் விழா புது பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது. நகராட்சி தலைவர் சியாமளா தலைமை வகித்தார். துணை தலைவர் கவுதமன் மற்றும் பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்பு, மரக்கன்றுகள் வழங்கி விழா கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி தெற்கு நகரத்துக்கு உட்பட்ட, 17வது வார்டு முதல், 36வது வார்டு வரையான பகுதிகளில் துணை முதல்வரின் பிறந்த நாள் விழா, மனிதநேய நாளாக கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள், கட்சி கொடி ஏந்தி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நகர பொருளாளர் மூர்த்தி, நகராட்சி துணை தலைவர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி ஏற்பாடு செய்திருந்தார். ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியில் துணை முதல்வர் பிறந்த நாளையொட்டி, துாய்மை பணியாளர்கள், வாட்டர் மேன் ஆகியோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி தலைமை வகித்தார். துணை தலைவர் சையது அபுதாஹீர் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை