உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்  கொண்டாட்டம்

 இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்  கொண்டாட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இந்திய அரசியல் அமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட காங். சார்பில், இந்திய அரசியல் அமைப்பு சட்ட தினத்தையொட்டி அம்பேத்கர் உருவ படத்துடன், தேசியக்கொடி ஏந்தி பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் ஊர்வலமாக சென்றனர். மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், இந்திய அரசியல் அமைப்பு சட்ட தினத்தையொட்டி உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் சியாமளா, கமிஷனர் குமரன், துணை தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தனர். நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சியில் உள்ள அரசு பள்ளிகளில், இந்திய அரசியல் அமைப்பு தினம் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்பின், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதேபோன்று, உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் உள்ள பள்ளிகளில், இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. உடுமலை: மேற்கூரை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மழைக்காலத்தில், சுரங்க பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகன ஓட்டுநர்கள் வேதனைக்குள்ளாகின்றனர். உடுமலை தளி ரோட்டில், பாலக்காடு அகல ரயில்பாதையின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்ட போது, ஒரு பகுதியில், சுரங்கப்பாதையும் உருவாக்கப்பட்டது. பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே துவங்கும் இந்த சுரங்க பாதையை, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயன்பாட்டுக்கு வந்த போதே சுரங்க பாதையின் ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கி பாதித்தது. மழை நீர் வெளியேற அமைக்கப்பட்ட வடிகாலில், பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பிரச்னை தொடர்கதையானது. நிரந்தர தீர்வாக, சுரங்கப்பாதையின் இருபுறங்களிலும் ரயில்வே நிர்வாகத்தால், மேற்கூரை அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் துவங்கியது. பல மாதங்களாகியும், மேற்கூரைக்கான கம்பிகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மழையில், சுரங்கப்பாதையின் ஓடுதளத்தில், தண்ணீர் தேங்கி வாகன ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர். சில மணி நேரம் போக்குவரத்தும் பாதித்தது. பிரதான வழித்தடத்திலுள்ள, சுரங்கப்பாதை மேற்கூரை அமைக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகத்தினர் விரைந்து முடிக்க அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை