| ADDED : மார் 17, 2024 12:22 AM
கோவை:கொலை வழக்கு குற்றவாளி மீது, குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் வசித்த, சிவகுமார், 36, என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 59, என்பவரை கொலை செய்தார். சிவகுமார் மீது ஆனைமலை போலீசார் கொலை வழக்கு பதிந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டும், தொடர்ந்து பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும், சிவக்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., பத்ரிநாராயணன், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாரிடம் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், சிவகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.சிவகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில், 16 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, எஸ்.பி., தெரிவித்தார்.