உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலையும் கிடைக்கும்!

பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலையும் கிடைக்கும்!

கோவை;கோவை மாவட்டத்தில், அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல், 14ம் தேதி வரை வழங்கப்படும். இம்முறை இலவச வேட்டி, சேலையும் சேர்த்து வழங்கப்படுகிறது.பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட, அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள, 1,537 ரேஷன் கடைகளுக்கும் தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஒதுக்கப்பட்டுள்ளன.இம்முறை, இலவச வேட்டி, சேலையும் பரிசு தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இதற்காக, 7 லட்சத்து, 55 ஆயிரத்து, 409 சேலைகள், 7 லட்சத்து, 35 ஆயிரத்து, 934 வேட்டிகள் ஒதுக்கப்பட்டன.இவை, வி.ஏ.ஓ.,க்கள் மூலமாக, அந்தந்த ரேஷன் கடைகளுக்கு நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன. முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு, 32 ஆயிரத்து, 895 வேட்டி, 85 ஆயிரத்து, 42 சேலைகள், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட உள்ளன.கோவை மாவட்டத்தில் சூலுார் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ரேஷன் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, அமைச்சர் முத்துசாமி இன்று (10ம் தேதி) காலை, 11:30 மணிக்கு துவக்கி வைக்கிறார்.வரும், 14ம் தேதி வரை பரிசுத்தொகுப்பு வழங்க, ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை