உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அகதிகள் முகாமில் பிறப்பவர்களுக்கு குடியுரிமை கோரிய மனு நிராகரிப்பு

அகதிகள் முகாமில் பிறப்பவர்களுக்கு குடியுரிமை கோரிய மனு நிராகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் பிறக்கும் குழந்தைகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு:இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் பிறக்கும் குழந்தைகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க பரிசீலிக்கும்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். அதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் எனக்கு அனுப்பிய பதிலில், 'அகதிகள் முகாம்களில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும், குடியுரிமை கேட்டு உரிமை கோர முடியாது. பிறப்பு அடிப்படையில் கோருவது என்றால், குடியுரிமை சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பிரிவின்படியே முடியும்' என்று கூறப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் பிறப்பிக்கும் குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும்படி, பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், மனுவில் போதிய விபரங்கள் இல்லை என்றும் முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. குடியுரிமை வழங்குவதற்கு தேவையான விபரங்களை அதிகாரிகளுக்கு அளிக்காமல், பொதுவாக உத்தரவு பிறப்பிக்க, முதல் பெஞ்ச் மறுத்து விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

மதன்
மார் 15, 2024 17:14

அவிங்களே அகதி. குழந்தை அதோகதி. பஹுத் அச்சா ஹை. அகதிகளை திருப்பி அனுப்பாம ஏன் வெச்சுக்கிட்டிருக்கீங்க? இலங்கையில் சண்டை நடக்குதா என்ன?


ராதா
மார் 15, 2024 10:16

இந்திய குடிமக்களே அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ந்னு போயிடறாங்க. இங்கே ஓசி ரேசன் அரிசி கிடைக்கலாம் ஹை.


RADE
மார் 15, 2024 09:35

முதலில் வழக்கு தொடுத்த நபருக்கு ஒரு அபராதத்தை போடுங்க


veeramani
மார் 15, 2024 09:07

இந்திய வக்கீல்கள் அதி புத்திசாலிகள். வேறு ஒரு நாட்டிலிருந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்து அகதிகளாக இருப்பவர்கள்.. அகதிகள்தான்.அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் வேறு நாட்டு குடிமக்கள்தான். இந்திய துணைக்கண்டத்தில் அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கூடாது.


Rajah
மார் 15, 2024 08:18

இது இலங்கை அகதிகள் மீது கொண்ட அக்கறை இல்லை. இதை ஒரு சாதகமாக வைத்துக்க்கொண்டு மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்க செய்யப்படும் சதி. என்னை பொறுத்தளவில் அங்குள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள். அது இலங்கைத் தமிழர்களுக்கு செய்யும் மாபெரும் உதவியாக இருக்கும். இலங்கைத் தமிழர்களின் ஜனத்தொகை கூடுவற்கு உதவியாக இருக்கும். அங்குள்ள இலங்கை அகதிகள் அனைவரும் சந்தர்ப்பம் கிடைத்தால் வெளி நாடுகளுக்கு பறந்து விடுவார்கள். அவர்களின் பிரதான நோக்கமும் அதுதான். ஆகவே இந்த திடீர் அக்கறை காட்டுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.


Svs Yaadum oore
மார் 15, 2024 07:36

இலங்கை யாழ்ப்பாண தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை என்றால் பிறகு இலங்கையில் உள்ள மலையக தமிழர் நிலைமை என்ன ஆகும் ??....மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் எதற்கு இலங்கை தமிழருக்கு ரெட்டை குடியுரிமை என்று கோரிக்கை வைத்தார்? இதற்கெல்லாம் பதில் இல்லாமல் இங்குள்ள விடியல் மறத்தமிழனுங்க இதில் வெறும் அரசியல் செய்தால் மேலும் இலங்கை யாழ்ப்பாண தமிழர் வெறுப்பை சம்பாதிக்க நேரும் ...யாழ்ப்பாண தமிழர் யாரும் இந்திய குடியுரிமை கேட்டு கோரிக்கை வைக்கவில்லை ...முதலில் விடியல் திராவிடனுங்க இலங்கை தமிழரை அகதிகள் என்று கேவலமாக பேசுவதை நிறுத்த வேண்டும் ...


Thirumalaimuthu L
மார் 15, 2024 07:36

இந்தியா ஐக்கிய நாட்டின் 1951 ஆம் ஆண்டின் அகதிகள் ஏற்பு சட்டத்தில் இதுவரை கையொப்பம் இடவில்லை அதனால் அகதிகளுக்கு இந்தியாவில்.. எதோ அவர்கள் நாட்டின் பிரச்சனை முடியும் வரை தங்கிக்கொள்ளலாம். இப்படி இஸ்லாமிய நாடுகளில் இருந்து தூரதப்பட்ட இஸ்லாமியர் உட்பட பிற மத்தவர்கள் 1951 முதல் 3 தலை முறையாக எல்லை மாநிலங்களில் இன்னும் அகதியாகதான் உள்ளனர் அவர்களில் இஸ்லாமியர் தவிர்த்து குடிஉரிமை வழங்க தான் CAA.. இஸ்லாமியர்களுக்கு அவர்கள் நாடு இஸ்லாமிய நாடக உள்ளது


Svs Yaadum oore
மார் 15, 2024 07:30

அமெரிக்காவில் பிறந்த குழந்தை என்றால் உடனே அங்கு குடியுரிமை என்பது இப்பொது கிடையாது ...அந்த சட்டமெல்லாம் மாற்றி விட்டார்கள் ....இங்கு பிறக்கும் பங்களாதேஷி ரோஹிங்கிய குழந்தைகளுக்கு இந்தியா குடியுரிமை கொடுக்க முடியாது ....முதலில் இங்குள்ள தமிழனுங்க தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழருக்கு அகதிகள் முகாமில் சுகாதாரமான வசதிகள் செய்து தரட்டும் ....மேலும் இங்குள்ள பங்களாதேஷிகளை யாரும் அகதிகள் என்று அழைப்பதில்லை .....ஆனால் இங்குள்ள மற தமிழனுங்க எதற்கு தொப்புள் கொடி உறவுகளை அகதிகள் என்று கூறுவது ??....


J.V. Iyer
மார் 15, 2024 06:16

இதற்கு எதற்கு முன்னுரிமை? முதலில் கொள்ளை அடித்த அரசியல்வாதிகளுக்கு தீர்ப்பு வழங்கினால் நல்லது.


Kasimani Baskaran
மார் 15, 2024 05:39

இதே பாணியில் போனால் சீனாவின் மீது படையெடுக்கக்கூட நீதிமன்றத்திடம் ஆணை வாங்கக்கூட மனுக்கொடுப்பார்கள் போல... வெளியுறவுத்துறை, உள்துறை நடவடிக்கைகளை, சட்டங்களை நீதிமன்றம் ஒரு சிலருக்காக மாற்ற முடியாது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை