உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்சோ வில் டிரைவர் கைது கடலுார் போலீசார் அதிரடி

போக்சோ வில் டிரைவர் கைது கடலுார் போலீசார் அதிரடி

கடலுார்: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ டிரைவரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டிணம் தனியார் காப்பகத்தில் பெற்றோரை இழந்த கடலுாரைச் சேர்ந்த 11 வயது சிறுமி தங்கி 6ம் வகுப்பு படிக்கிறார். சிறுமி அடிக்கடி அழுது கொண்டிருப்பதை பார்த்து காப்பாளர் விசாரணை நடத்தினார்.விசாரணையில், சிறுமி பாட்டில் தங்கியிருந்த போது, கடலுார், திருவந்திபுரம் சாலக்கரையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகேஷ்குமார்,42; என்பவர் பாலியல் தொல்லை அளித்தது தெரிந்தது.இதுகுறித்து கடலுார் மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் காப்பாளர் நாகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் நேற்று வழக்குப் பதிந்து மகேஷ்குமாரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை