உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கால்வாயில் கழிவுநீர் தேக்கம் கொசு உற்பத்தியால் பாதிப்பு

கால்வாயில் கழிவுநீர் தேக்கம் கொசு உற்பத்தியால் பாதிப்பு

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் ஊராட்சியில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் முழுவதும் கொசு உற்பத்தியாகும் இடமாக மாறி உள்ளது.கடலுார் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி சி.என்.பாளையம்.இந்த ஊராட்சியில் மலையாண்டவர் கோவில் செல்லும் சாலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் 15வது நிதிக்குழு மான்ய நிதியில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.இந்த கால்வாய் அளவீடு செய்யாமல் சாலையை ஒட்டியே கட்டப்பட்டது.இதனால் இந்த சாலை ஒத்தையடி சாலையாக மாறி விட்டது.மேலும் இந்த சாலையில் கட்டப்பட்ட கால்வாயில் வரும் தண்ணீர் முழுமையாக ஓடாமல் கடைவீதியில் தேங்கி நிற்கிறது.இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.இந்த கால்வாயில் டாய்லட்டிலிருந்து வரும் தண்ணீரையும் இணைத்துள்ளனர்.இதனால் கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் வீசுவாதால் அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், அவதியடைந்து வருகின்றனர்.மேலும் கால்வாய் முழுவதும் குப்பைகள் அடைத்துக் கொண்டுள்ளது.ஆகையால் ஒன்றிய அதிகாரிகள் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன் இதுபோன்ற கால்வாய்கள் தேவையான இடமா என ஆராய்ந்தும் பணியை மேற்கொள்ளவேண்டும். மேலும் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியினை யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெளிவாக பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ