உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிமகன்களின் கூடாரமான நுாலகம்

குடிமகன்களின் கூடாரமான நுாலகம்

நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த தீவளூர் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், நூலகக் கட்டடம் கட்டப்பட்டது. நூலகத்திற்கு ஒன்றிய அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் மாத, வார இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் வரும்.இது தவிர, பொது அறிவு புத்தகங்கள், மாணவ, மாணவியருக்கு பயன்படும் இந்தியா மற்றும் உலக நாடுகளில் நடந்த வரலாற்றுக் கதைகள் அடங்கிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன.கிராமங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை தங்கள் அறிவுப்பசியை போக்கவும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும் வந்து செல்வர்.ஆனால், ஓரிரு மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நூலகம் நாளடைவில் தளவாட பொருட்கள், புத்தகங்கள் இன்றி காட்சிப்பொருளானது. இதனால் நுாலகம் பகல், இரவு நேரங்களில் மது அருந்தும் கூடாரமாகவும், கால்நடைகளின் தொழுவமாகவும் மாறியுள்ளது.எனவே, தீவளூரில் குடிமகன்களின் கூடாரமாக உள்ள கிராமப்புற நுாலகத்தை தினசரி திறக்க வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை