உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆசிரியர்களை கைது செய்ய முயற்சி: சமரசத்தால் தவிர்ப்பு

ஆசிரியர்களை கைது செய்ய முயற்சி: சமரசத்தால் தவிர்ப்பு

திண்டுக்கல் : மாநில தொடக்க கல்வி இணை இயக்குனர் ராமராஜை முற்றுகையிட்ட ஆசிரியர்களை கைது செய்ய போலீசார் முயன்றது, பாலபாரதி எம்.எல்.ஏ., தலையீட்டால் தவிர்க்கப்பட்டது. திண்டுக்கல்லில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மாநில தொடக்ககல்வி துறை இணை இயக்குனர் ராமராஜ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தமிழரசு, முன்னிலையில் நடந்தது. கவுன்சிலிங் நடப்பதற்கு முன்னதாகவே நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பலருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது, விதவை முன்னுரிமையில் இடமாறுதல் வழங்கப்படவில்லை என கூறியும், இணை இயக்குனர் ஒருமையில் பேசுகிறார் என குற்றம்சாட்டியும், கவுன்சிலிங் நடந்த அறையை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். பணி செய்யவிடாமல் தடுப்பாத கூறி போலீசார் வரவழைக்கப்பட்டனர். டி.எஸ்.பி., சுருளிவேலு தலைமையில் வந்த போலீசார், முற்றுகை போராட்டம் நடத்திய ஆசிரியர்களை கைது செய்து ஏற்றிச்செல்ல மினிபஸ்களுடன் வந்தனர்.தகவலறிந்த பாலபாரதிஎம்.எல்.ஏ., அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், 'நிர்வாக மாறுதல் செய்தததில் நான் தலையிடமுடியாது. விதவை முன்னுரிமையில் இடமாறுதல் தரப்படும், என இணைஇயக்குனர் ராமராஜ் கூறியதையடுத்து, ஆசிரியர்கள் சமரசமடைந்தனர். இதன் மூலம் ஆசிரியர்களை கைது செய்வது தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை