உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துணை அஞ்சலகம் இடமாற்றம் கோபியில் மக்கள் அவதி

துணை அஞ்சலகம் இடமாற்றம் கோபியில் மக்கள் அவதி

கோபி : கோபி, கமலா ரைஸ் மில் வீதியில், புதுப்பாளையம் துணை அஞ்சலகம் பல ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் இயங்கியது. இந்நிலையில் கோபி, நாகர்பாளையம் சாலையில் உள்ள, கோபி தலைமை அஞ்சலக வளாகத்துக்கு, முன்னறிவிப்பின்றி கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டது.இதனால் துணை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக இல்லத்தரசிகள் மற்றும் கைத்தொழில் செய்வோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.துணை அஞ்சலகம் முன்பு இயங்கிய இடத்துக்கும், புதிய இட-மான தலைமை அஞ்சலக அலுவலக வளாகத்துக்கும், பிரதான சத்தி சாலை வழியே, ௩ கி.மீ., வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட தபால்துறை நிர்வாகம், துணை அஞ்சலகத்தை முன்பு போல் பழைய இட்ம அல்லது அதே பகுதியில் வேறிடத்-துக்கு மாற்றம் செய்ய வாடிக்கையாளர் கோரிக்கை விடுத்துள்-ளனர். இதுகுறித்து தபால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மேற்கு மண்டல அஞ்சலக துறை தலைவர் மற்றும் ஈரோடு அஞ்-சலக கோட்டத்தின் கண்காணிப்பாளர்தான் அதை முடிவு செய்ய வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை