உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 8௧ அடியை கடந்தது பவானிசாகர் நீர்மட்டம்

8௧ அடியை கடந்தது பவானிசாகர் நீர்மட்டம்

புன்செய் புளியம்பட்டி, : பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்-பகுதியில் தென்மேற்கு பருவமழை கொட்டுகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த, 16ல், 70 அடியாக இருந்த நீர்மட்டம், 8௧ அடியை நேற்று எட்டியது. மாலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து, 15,717 கன அடி, அணை நீர்மட்டம், ௮௧.௧௬ அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், நடப்பாண்டு வழக்கம்போல் ஆக., 15ம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு அதிகரித்துள்ள-தாக பாசன பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ