உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு முனிசிபல் காலனியில் 6வது நாளாக துாய்மை பணி

ஈரோடு முனிசிபல் காலனியில் 6வது நாளாக துாய்மை பணி

ஈரோடு : ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட, 28வது வார்டில் முனிசிபல் காலனி முதல், பெரிய வலசு வரை உள்ள சாக்கடை கால்வாய்களில், அடிக்கடி அடைப்பு ஏற்படுவது வழக்கம். இதன் காரணமாக, கழிவு நீர் தேங்கி, சாலையில் அவ்வப்போது ஆறாக ஓடும். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்படி, கடந்த வாரம் மாநகராட்சி அதிகாரிகள், முனி-சிபல் காலனி முதல் பெரிய வலசு வரை உள்ள சாக்கடை கால்வாய்களை துார்வார முடிவு செய்-தனர். இப்பணிகளை மூன்று நாட்களில் முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், கால்வாய்களில் அள்ள அள்ள மண் குவியலும், பிளாஸ்டிக் கழிவு-களும் வருவதால், நேற்று ஆறாவது நாளாக துார்வாரும் பணி நீடித்தது. 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை