உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் தேர்வு

ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு, ஈரோடு மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொது குழு கூட்டம் மற்றும் 2024-27 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு ஈரோட்டில் நடந்தது.மாவட்ட தலைவர் ஆடிட்டர் மாணிக்கம் தலைமை வகித்தார். தமிழ் மாநில அமைப்பின் சார்பில் தேர்தல் அதிகாரிகள் வக்கீல் பாண்டுரங்கன், சென்னை மாவட்ட துணை தலைவர் சாய்ராம் முன்னிலை வகித்தனர். கவுரவ தலைவர் சிபி குணசேகரன் வரவேற்றார். ஆண்டு அறிக்கையை செயலாளர் சாரங்கபாணி சமர்பித்தார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் சிங்கார வேலு சமர்பித்தார்.கூட்டத்தில், புதிய மாவட்ட தலைவராக ஆடிட்டர் மாணிக்கம், துணை தலைவர்களாக சிங்காரவேலு, மோகன், செயலாளர் சாரங்கபாணி, துணை செயலாளர்கள் அய்யப்பன், சிவக்குமார், பொருளாளர் வடிவேல் ஆகிய ஏழு பேர் பொறுப்பேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை