உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாடகைக்கு இயக்கப்பட்ட சொந்த வாகனங்கள் பறிமுதல்

வாடகைக்கு இயக்கப்பட்ட சொந்த வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள், நாமக்கல் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இணைந்து, சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் சொந்த வாகனத்தை வாடகைக்கு இயக்கிய, ஐந்து வாகனங்களை பிடித்தனர்.இதுகுறித்து ஈரோடு துணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ் கூறியதாவது: சொந்த வாகனத்தை வாடகை வாகனமாக பயன்படுத்தினால், வரும் காலங்களில் வாகன உரிமையாளர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாகனங்களின் பதிவு சான்றை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக தடை செய்யலாம். கடந்த, 2023ல் நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் இதுபோன்ற சோதனையில், 87 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சொந்த வாகன உரிமையாளர்கள் 'ஆப்' மூலம் விளம்பரப்படுத்தி வாடகைக்கு விடப்படும் என குறிப்பிடுகின்றனர். அவ்வாறு விளம்பரம் செய்வது கண்டறிந்தால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி