உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 122 விநாயகர் சிலை ஈரோட்டில் ஊர்வலம்

122 விநாயகர் சிலை ஈரோட்டில் ஊர்வலம்

ஈரோடு:ஈரோட்டில் ஐந்து நாட்களாக வழிபாட்டில் இருந்த 122 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று, காவிரியில் விசர்ஜனம் செய்யப்பட்டன. ஈரோடு டவர் லைன் காலனி, முனிசிபல் காலனி, வாசுகி வீதி, பெருமாள் கோவில் வீதி, வி.வி.சி.ஆர்., நகர், அசோகபுரம், வீரப்பன் சத்திரம், மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட 122 இடங்களில், ஹி÷ந்து முன்னணி சார்பில், செப்டம்பர் 1ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவை அனைத்தும் நேற்று மாலை 3 மணிக்கு, ஈரோடு சம்பத்நகர் நசியனூர் சாலைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு, ஹிந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராஜா, ஹிந்து முன்னணி மாநில துணைத்தலைவர் பூசப்பன், மாநில செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் ஜெகதீஸ், பா.ஜ., மாநில பிரச்சார அணித்தலைவர் சரவணன் ஆகியோர் பேசினர். மாலை 4 மணிக்கு சம்பத் நகரில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது. அண்ணா தியேட்டர், பெரிய வலசு, முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, எம்.ஜி.ஆர்., சிலை, பிரப்சாலை, காமராஜ் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, எஸ்.கே.சி., சாலை வழியாக காவிரியாற்றில் நேற்று இரவு 7 மணிக்கு விசர்ஜனம் செய்யப்பட்டன. ஏ.டி.எஸ்.பி., மகேந்திரன் தலைமையில் 300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி