உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1.60 லட்சம் பருத்தி ஏலம்

ரூ.1.60 லட்சம் பருத்தி ஏலம்

அந்தியூர்: அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 1.60 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது.அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள் தோறும் பருத்தி ஏலம் நடக்கிறது. பருத்தி வரத்து அதிகமாக இருப்பின், திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் ஏலம் நடப்பது வழக்கம்.இவ்வாரம் விற்பனைக் கூடத்துக்கு 13 ஆயிரம் மூட்டை பருத்தி வரத்தானது. அதிகளவில் மூட்டை வரத்தானதால், இவ்வாரமும் இரு நாட்கள் ஏலம் நடந்தது. ஏலத்தின் போது, 'பிடி' ரக பருத்தி கிலோ 35.20 ரூபாயிலிருந்து 37.50 ரூபாய்க்கும், 'சுரபி' ரகம் 39 முதல் 42.40 ரூபாய்க்கும் விற்பனையானது. இவ்வாரம் மொத்த 1.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை