உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விளைபொருள் ஏற்றுமதி;வேளாண் துறை யோசனை

விளைபொருள் ஏற்றுமதி;வேளாண் துறை யோசனை

ஈரோடு:ஈரோட்டில், வேளாண் துறை சார்பில் தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்ன வெங்காயம், வெள்ளரி பயிரிடும், அப்பீடா பயிற்சி பெற்ற விவசாயிளை தேர்வு செய்து ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கான உதவி மேற்கொள்ளப்படும். இதன்படி ஏற்றுமதிக்கான சான்றிதழை பெற்றுத்தரும் பொருட்டு, ஒரு நபருக்கு அதிகபட்சமாக, 15,000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.மா, தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்ன வெங்காயம், வெள்ளரி பயிரிட்டு, ஏற்றுமதியில் ஆர்வமுள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தி நிறுவனங்களாக இருக்க வேண்டும். கடந்த ஏப்., 1 அல்லது அதற்கு பின்னர் பெற்ற இறக்குமதி, ஏற்றுமதி குறியீடு, பதிவு பெற்ற உறப்பினர் சான்றிதழ், டிஜிட்டல் கையொப்பம், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., மத்திய உரிமம் பதிவு செய்ததற்கான ரசீதுகளை சமர்பிக்க வேண்டும். கூடுதல் விபரத்துக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை, 0424 2903889, 87785 93957 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை