உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாறை குழியில் தீ; 18 மணி நேரம் போராடி அணைப்பு

பாறை குழியில் தீ; 18 மணி நேரம் போராடி அணைப்பு

ஈரோடு:ஈரோடு அருகே வில்லரசம்பட்டி, தொட்டம்பட்டியில் நாச்சிமுத்துவுக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பிலான கல் குவாரி உள்ளது. இங்குள்ள பாறை குழியில் அப்பகுதியில் உள்ள சில ஆலைகள், தோல் உள்ளிட்ட பல்வேறு திடக்கழிவுகளை கொட்டி வருகின்றனர். இத்துடன் எண்ணெய் கழிவுகளையும் கொட்டியுள்ளனர்.இதில் நேற்று முன் தினம் மாலை, 5:45 மணியளவில் தீப்பிடித்து எரிய துவங்கியது. இதனால் கிளம்பிய புகை மூட்டம் சாலையை மறைத்தது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.தகவலறிந்த ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், 6:10 மணிக்கு சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். ஏழு தனியார் லாரிகளில் தண்ணீர் வரவழைக்கப்பட்டு நள்ளிரவில் தீயை கட்டுப்படுத்தினர்.ஆனாலும், தொடர்ந்து கரும்புகை வெளியேறியபடி இருந்தது. மீண்டும் தீப்பிடிக்க வாய்ப்பிருந்ததால் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கேயே காத்திருக்க அறிவுறுத்தப்பட்டனர்.இந்நிலையில் நேற்று மதியம், 12:00 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இதன் பிறகே தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு நிலையம் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ