| ADDED : ஜூலை 04, 2024 08:43 AM
ஈரோடு : பருவமழை தொடங்குவதை ஒட்டி, நேற்று முன்-தினம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், தலைமை பொறியாளர் விஜயகுமார் தலை-மையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவா-திக்கப்பட்டது. இதையடுத்து, மழையால் பாதிக்-கப்படும் அன்னை சத்யா நகர், பூம்புகார் நகர், பி.பெ.அக்ரஹாரம், சுண்ணாம்பு ஓடை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பகுதி களில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.இதுகுறித்து தலைமை பொறி-யாளர் விஜயகுமார் கூறுகையில்,''மாநகராட்-சியில் மழை நீர் எங்கெங்கு தேங்கும், அவற்றால் என்ன மாதிரியான பாதிப்புகள் உள்ளது, அதனை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மழை நீர் வடிகால்வாய்க்காலில் அடைப்புகள், கால்வாயின் அளவு, அதன் ஆழம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பரு-வமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.