உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிவன்மலையில் நிலை சேர்ந்த தைப்பூச தேர்

சிவன்மலையில் நிலை சேர்ந்த தைப்பூச தேர்

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில், நடப்பாண்டு தைப்பூசத் தேரோட்ட நிகழ்வு, கடந்த, 26ம் தேதி மாலை தொடங்கியது. மாலை, 4:40 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு இழுக்கப்பட்ட நிலையில், 5:20 மணிக்கு தெற்கு வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு தேர் மலையை சுற்றிவந்து கோசமலை பகுதியில் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை, 4:00 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். அரோகரா கோஷமிட்டபடி இழுத்து சென்றனர். மாலை, 6:40 மணிக்கு தேர் நிலை அடைந்தது. இன்று காலை, 9:௦௦ மணிக்கு காலசாந்தி திருக்கோயில் மற்றும் பல்வேறு சமுதாய மக்களின் மண்டப கட்டளை நடக்கிறது. மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து, சுவாமி மலைக்கு எழுந்தருளும். அதை தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு, தைப்பூச விழா நிறைவுக்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி