உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

குமாரபாளையம்: ஈரோடு மாவட்டம், சன்னியாசிபட்டியை சேர்ந்தவர் சீரங்கன், 50; கட்டட தொழிலாளி. குமாரபாளையம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த பொறியாளர் யுவராஜிடம், கட்டட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரது மகன் சேகர், வேலை செய்த இடத்தில் வந்து கேட்டுள்ளார். அப்போது, 'பூலக்காடு பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் வேலை செய்து வந்ததாகவும், மாலை, 3:30 மணியளவில் மயங்கி விழுந்து விட்டதாகவும், வாயில் நுரை தள்ளியதால், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும்' தெரிவித்தனர். அரசு மருத்துவமனைக்கு சென்று கேட்ட போது, அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசில், சேகர் புகாரளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை