| ADDED : மார் 05, 2024 01:36 AM
சென்னிமலை:சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இதில் சமீப காலமாக செவ்வாய்கிழமைகளில், அதிகாலை தொடங்கி இரவு வரை லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இதனால் செவ்வாய்கிழமைகளில், மலைப்பாதை டோல் கேட்டை மூடிய பிறகும், திறக்குமாறு அரசியல் வி.ஐ.பி., பக்தர்கள் பணியாளர்களை மிரட்டுவது அதிகரித்தது.இதை தடுக்கவும் பக்தர்கள் அனைவருக்கும் டோல்கேட் திறந்திருக்கும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வகையில், திருக்கோவில் நிர்வாகம் சார்பாக நேரம் அறிவித்து, அறிவிப்பும் வைத்துள்ளனர்.அதில் தினமும் காலை, 5:30 மணிக்கு டோல் கேட் திறக்கப்படும். இரவு, 7:45 மணிக்கு மூடப்படும். செவ்வாய்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் அதிகாலை, 4:30 மணிக்கு திறந்து, இரவு, 8:௦௦ மணிக்கு மூடப்படும்.இந்த நேரத்துக்குப் பிறகு மலை கோவிலில் இருந்து கீழே வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.